மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு

இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய  மூத்த இராணுவ அதிகாரிகள்  பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

நௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம்

சிறிலங்காவுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், சிறிலங்கா இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த கொழும்பு வருகிறார் டேவிட் கமரூன்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

உறவுகளை நினைவுகூரும் உரிமையை தடுக்கக்கூடாது – தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை

மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொமன்வெல்த் தலைமையை ஒப்படைக்க மோல்டா செல்கிறார் மைத்திரி

கொமன்வெல்த் தலைவர்களின் 24ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை மோல்டாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளில் சிறிலங்கா – சமந்தா பவர் பாராட்டு

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த பிரிவினை கோரிய உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் பாராட்டியுள்ளார்.