மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்காவின் புதிய அரசுக்கு உதவத் தயார் – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இன்னும் வெளிப்படையான, ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவை எதிர்கொள்வதற்கான பாரிய காய்நகர்த்தலில் சிறிலங்கா

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

ஊழலை ஒழிக்க சீனாவின் பொருளாதாரத் தலையீட்டை குறைக்க வேண்டியுள்ளது – சிறிலங்கா

சிறிலங்காவில் ஊழலை ஒழிப்பதற்காக சீனாவின் பொருளாதாரத் தலையீடுகளை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஆபத்தில் கோத்தா – எச்சரிக்கிறார் அமெரிக்க பேராசிரியர்

அமெரிக்கக் குடிமகன் என்ற வகையில், அமெரிக்கச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களுக்காக சட்டத்தின் முன்நிறுத்தப்படும் ஆபத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்வதாக அமெரிக்க சட்டப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரம்: இந்தியாவிடம் உதவி கோருவார் மங்கள சமரவீர

சிறிலங்காவின் புதிய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று மாலை  சுமார் 6 மணியளவில் புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

மகிந்தவைப் போலவே அநாதரவாக கைவிடப்படுகிறது மத்தள விமான நிலையம்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையம், கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் – நம்பிக்கை பொங்கும் திருநாளாகத் தைப்பொங்கல் : அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

‘நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்குத் தமிழ் மக்களாகிய நாமும் கரங்கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் நாளாகத் தைப்பொங்கல் இம்முறை புலர்ந்துள்ளது’