மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர

சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

மகிந்தவின் உதவியில் பதவியைப் பிடித்த பான் கீ மூன் – கொரிய நாளிதழ் அதிர்ச்சித் தகவல்

2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றுடன் முடிகிறது சீன – சிறிலங்கா படைகளின் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சி

சீன – சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ என்ற குறியீட்டுப் பெயரிலான, இருபது நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க  இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒபாமாவினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கைத் தமிழ் விஞ்ஞானி

விஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக்கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ்ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்திய சீனப் பிரதமர்

சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை, ஏற்படுத்துமாறும், அதனைத் தொடர்ச்சியாகப் பேணும் உறுதியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்குமாறும்,  சிறிலங்கா அதிபரிடம், சீனப் பிரதமர் லி கெகியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீன அதிபரிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

தமது அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.