மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் பற்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா  பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது

சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

நீர்மூழ்கிகள் தரித்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – சிறிலங்காவிடம் எதிர்பார்க்கிறது சீனா

சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையைப் பிற்போடும் ஐ.நாவின் முடிவுக்கு அமெரிக்கா, சிறிலங்கா வரவேற்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா நடத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, அமெரிக்காவும், சிறிலங்காவும் வரவேற்றுள்ளன.

விசாரணை அறிக்கையை செப்ரெம்பர் வரை பிற்போட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இணக்கம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையை, வரும் செப்ரெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முக்கிய பங்காளராக அமெரிக்கா மாறியுள்ளது – மங்கள சமரவீர உரை

சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளராக அமெரிக்கா மாறியிருப்பதாகவும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்தும் விவகாரம் – பிடிகொடாமல் நழுவும் அமெரிக்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துவதும் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது ஐ.நா மனித உரிமை ஆணையாளரே என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.