மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல் – முந்தினார் ஹிலாரி

அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிப்பதாக பிந்திய முடிவுகள் கூறுகின்றன. (காலை 6.30 மணி நிலவரம்)

அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் – வெற்றி பெறுவாரா ஹிலாரி?

அமெரிக்காவின் 58 ஆவது அதிபர் தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி நிலவுகிறது.

மூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மீண்டும் தெரிவு – ரஷ்யா தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான 14 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்காக நேற்று ஐ.நா பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.

சம்பந்தனைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவன் புதிய சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.

9 ஆவது ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார் அன்ரனியோ குட்ரேரெஸ்

அடுத்த ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்ரேரெஸ் நேற்று ஐ.நா பொதுச்சபையினால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஐயோ

தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐயோ என்ற சொல், ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. ஒக்போர்ட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில், ஐயோ (Aiyo) என்ற சொல் உள்ளடக்கப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலராகிறார் அன்ரனியோ குட்டெரெஸ்

ஐ.நாவின் புதிய பொதுச்செயலராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்டெரெஸ் இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.