மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

‘எப்போதும் அமெரிக்கா உங்களுடன் இருக்கும்’ – சிறிலங்கா அதிபருக்கு தைரியமூட்டிய ஒபாமா

நிலைமாறு கட்டத்தில் உள்ள சிறிலங்கா உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக, அமெரிக்க அமெரிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறிலங்கா தூதுவரைத் தாக்கிய மேலும் நான்கு பேரைத் தேடுகிறது மலேசிய காவல்துறை

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தூதரைத் தாக்கிய ஐந்துபேர் மலேசிய காவல்துறையினரால் கைது

கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகிந்தவுக்கு எதிராக மலேசியாவில் தொடர்கிறது போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

படகில் இருந்தவர்களில் பலர் சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்கள் – தி கார்டியன்

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

அகதிகள் படகைத் திருத்த வாய்ப்பில்லை – மாற்றுவழியை நாடும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் தங்கியுள்ள 44 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு,  சிறிலங்கா மற்றும், இந்தியத் தூதரகங்களிடம் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.