மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

படகில் இருந்தவர்களில் பலர் சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்கள் – தி கார்டியன்

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

அகதிகள் படகைத் திருத்த வாய்ப்பில்லை – மாற்றுவழியை நாடும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் தங்கியுள்ள 44 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு,  சிறிலங்கா மற்றும், இந்தியத் தூதரகங்களிடம் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா

தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

படகில் தத்தளித்த தமிழ் அகதிகளை தரையிறங்க இந்தோனேசியா அனுமதி

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் படகு விவகாரம் – இந்தோனேசியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமாகிய போது, இயந்திரக் கோளாறினால் இந்தோனேசியாவின்  ஆச்சே மாகாணத்தில் தரைதட்டிய இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்லத் தயாராகிறது இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அகதிகள் படகை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு

அவுஸ்ரேலியா நோக்கில் செல்லும் வழியில் மோசமான காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகு மீண்டும் இந்தியாவுக்கே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய கரையில் குதித்த இலங்கை அகதிப் பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.