மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

புதூர் ஆயுதப் பொதி  – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பினார்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி

சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,  சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார்.

காலியில் இந்திய ஆய்வுக் கப்பல்

சமுத்திரவியல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் ஜமுனா நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் – இந்த வாரம் முடிவு

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதவியேற்றார் புதிய கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படையின் 23 ஆவது தளபதியாக, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

இராணுவத் தலைமை அதிகாரிக்கு 10 மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் பரிந்துரை

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு 10 மூத்த மேஜர் ஜெனரல்களில் பெயர்களை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பரிந்துரைத்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு புதிய தளபதி

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்  மீது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

அரசியலமைப்பு திருத்த முயற்சிகளை தோற்கடிப்போம் – மகிந்த அமரவீர

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.