மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அந்தோனியார் தேவாலயத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.

அதிபர் வேட்பாளர் கோத்தா – அதிகாரபூர்வமாக அறிவித்தார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான உடன்பாடு – 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எக்னெலிகொட படுகொலை- 9 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த சூழ்ச்சி தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு சிறிலங்காவின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடுவிப்பு

ரிவிர இதழின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் இருந்து, மேஜர் பிரபாத் புலத்வத்த உள்ளிட்ட 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு -2019’  இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பதவியைத் தந்து வாயை மூட வைக்க முயன்றார் மைத்திரி – குற்றம்சாட்டுகிறார் சரத் பொன்சேகா

அண்மையில் தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வழங்க, பாதுகாப்பு அமைச்சராக உள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்கிறார் என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கரன்னகொட, றொஷானுக்கும் பொன்சேகாவுக்கு இணையான பதவி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவும், சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.