மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கோத்தாவைக் காக்க முயன்ற இராணுவப் பேச்சாளர் நீக்கம் – புதிய பாதுகாப்பு செயலருக்கும் நெருக்கடி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் பாதுகாக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய பாதுகாப்புச் செயலரிடமும் சிறிலங்கா அதிபரால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காணாமற்போன 2000 பேர் குறித்து அனைத்துலக சட்டங்களுக்கு அமைய விசாரணை

காணாமற்போன 2000 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இவை தனியாக கோவைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஜெனரல் ஆனார் சரத் பொன்சேகா – குடியுரிமையை வழங்கவும் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மீண்டும் ஜெனரல் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதவி?

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக, முன்னாள் பாதுகாப்புச் செயலரும், ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியுமான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்கு அடுத்த அதிர்ச்சி – மகாநாயக்கர்களிடம் முறைப்பாடு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மகிந்தவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய றோ அதிகாரி – பரபரப்புத் தகவல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ வின் கொழும்பு பணியகத் தலைமை அதிகாரியான இளங்கோ முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபா அரச பணத்தை ஏப்பம் விட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்காக, 2 பில்லியன் ரூபா அரசாங்கப் பயணத்தைச் செலவிட்டுள்ளதாக, நிதியமைச்சு அதிகாரிகளை ஆதாரம்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுனர் பாலிஹக்காரவின் நியமனம் – கூட்டமைப்பு பிரமுகர்கள் வரவேற்பு

வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் இராஜதந்திரயான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.