ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் சிறிலங்கா
தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட- தற்போது வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவி வகித்து வரும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை, திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 14ம் நாள் இரண்டு நாள் அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நாளை ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.
சிறிலங்காவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தையடுத்து, சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சோதனையிட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பொய்க் குற்றச்சாட்டுக் கூறுவதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.