உயர்மட்டப் பிரதிநிதியை கொழும்புக்கு அனுப்புகிறார் ஐ.நா பொதுச்செயலர்
ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு, இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, போர்க்குற்றவாளிகளில் முக்கியமானவராக குற்றம்சாட்டப்பட்டு வரும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேசியுள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார்.
கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது.