‘வேட்பாளர் நானே எனக் கூறவில்லை’ – ரணில் மறுப்பு
அதிபர் தேர்தலில் தானே போட்டியிடப் போவதாக நேற்றைய கூட்டத்தில் தாம் கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தானே போட்டியிடப் போவதாக நேற்றைய கூட்டத்தில் தாம் கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர நேற்று மாலை காலமானார்.
25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக, 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
வரும் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார் என கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பகிரங்க அறிவிப்பினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனுவுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரித்துள்ளார், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.
சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியை விட பிரதமர் பதவியே அதிகாரம் கொண்டதாக மாறியிருப்பதால், அதன் மீதே இனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், 2020இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.