மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நேற்று முடிவெடுத்தது ஹெல உறுமய – இன்று அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜாதிக ஹெல உறுமய தாம் முக்கிய முடிவென்றை எடுத்துள்ளதாகவும், அதுபற்றி இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

25 விதமான 10 ரூபா நாணயக்குற்றிகளை வெளியிட்டது சிறிலங்கா

சிறிலங்காவின் 25 நிர்வாக மாவட்டங்களையும் சித்திரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயக்குற்றிகள் இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போர்க்குற்ற சாட்சியங்களை கோருகிறது சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா விசாரணை நிபுணத்துவமான முறையில் நடக்கவில்லை – சிறிலங்கா மீண்டும் குற்றச்சாட்டு.

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகள், நிபுணத்துவம் வாய்ந்ததாக இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படையின் அனுபவங்கள் – நூலை வெளியிட்டார் முன்னாள் தளபதி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட எழுதிய அதிஸ்டானய (விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில், கடற்படையின் பங்கு) என்ற நூல் இன்று காலை கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் நீடிக்குமா ஜாதிக ஹெல உறுமய? – முடிவு இன்று அறிவிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா – வெளியேறுவதா என்பதை முடிவு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரை – அமைச்சர் வாசுதேவவிடம் பொறுப்பு

வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரைப் பணிகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

வரும் 18ம் நாள் நள்ளிரவு வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.