நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – அறிவித்தார் மகிந்த
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது முடிவை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரிக்கவோ அல்லது, பிரதமர் வேட்பாளராகப் பெயரிடவோ இல்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கா கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வரும் நிலையில், தனியானதொரு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மகிந்த ஆதரவு அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.