ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்
வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


