மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி

அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுள்ள சிறிலங்கா அணியின் வீரர், குமார் சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்காது

சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று பதவியேற்க வாய்ப்புகள் இல்லை என்று ஐதேக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடையும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மகிந்த தலைமையில் உருவாகிறது தனியான அணி?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தேசிய அரசாங்த்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய தரப்பினருடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்கவுள்ளனர்.

சிறிலங்கா விவகாரம் குறித்து ஜப்பானில் பேச்சு நடத்துகிறார் ரமபோசா- கட்டுநாயக்க வந்து சென்றார்

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க பிரதி அதிபர் சிறில் ரமபோசா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கிச் சென்றுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களைக் கையளிப்பு

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

35 பேர் கொண்ட அமைச்சரவை – ஐதேகவுக்கு 19, சுதந்திரக்கட்சிக்கு 16

சிறிலங்காவில் புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில் – சிறிமாவோவின் சாதனையை சமப்படுத்துகிறார்

சிறிலங்காவின் புதிய பிரதமராக தேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின  பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்

சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.

தேசியப்பட்டியல் விவகாரம்: ஜேவிபிக்குள்ளேயும் இழுபறி – அந்தனி ஜீவாவுக்கு வாய்ப்புக் கிட்டுமா?

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற்றுள்ள ஜேவிபிக்குள்ளேயும், அந்த ஆசனங்களுக்கான நியமனங்களை செய்வது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ( பிந்திய செய்தி இணைப்பு)