மேலும்

மாவீரர் வாரத்தில் தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்- உணர்வுபூர்வமாக அஞ்சலி

தமிழீழ தேசிய மாவீரர் நாளுக்கு முன்னோடியாக மாவீரர் வாரம் தமிழர் தாயகத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் சிவப்பு- மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே, நினைவுப் பந்தல்கள் அமைக்கப்பட்டு மாவீரர்களின் பொதுச் சின்னம் மற்றும் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

பிரதேச ரீதியாக மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு மாவீரர்களின் உருவப்படங்கள் மற்றும் பெயர்களை உள்ளடக்கிய கல்வெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பிரதேச ரீதியாக மாவீரர் பெற்றோர், உரித்துடையோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

மாவீீரர் வாரத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறிலங்கா காவல்துறையினரின் தடைகளையும் தாண்டி, மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு -செம்மலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

கிளிநொச்சி – உருத்திரபுரம்

கிளிநொச்சி – முரசுமோட்டை

முல்லைத்தீவு -முத்தையன் கட்டு

முல்லைத்தீவு- உடையார்கட்டு

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு

கிளிநொச்சி- வன்னேரி

முல்லைத்தீவு- விசுவமடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *