மேலும்

ரவி , ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும்  இருவர்,  மீறியுள்ளதாக சிறிலங்கா உயர் நீதிமன்றம்   இன்று தீர்ப்பளித்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம்,பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் பிரதி காவல்துறைமா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும்  பிரதம ஆய்வாளர் இந்திக சில்வா மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் மீறியுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காகச் செயல்பட்டதன் மூலம், இவர்கள் மூவரும்,  ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *