மேலும்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பிரித்தானிய துணைப் பிரதமர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இன்று காலை அதிபர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் அண்மைய பொருளாதார முன்னேற்றத்தை பிரித்தானிய துணைப் பிரதமர் லாமி வரவேற்றதுடன், அரசாங்கத்தின் புதிய பொருளாதார நடவடிக்கைகளைப் பாராட்டினார் என்று அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான சிறிலங்காவின் முயற்சிகளை ஆதரிக்க பிரித்தானியா தயாராக இருப்பதாகவும் டேவிட் லாமி கூறியுள்ளார்.

டிட்வா சூறாவளியின் தாக்கத்திலிருந்து சிறிலங்கா விரைவாக மீண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்றும் சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *