அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சிறிலங்காவுக்குப் பயணம்
அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அனைத்துலக நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் அனைத்துலக நாணய நிதியத்தின், சிறிலங்கா தொடர்பான திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக நாணய நிதியத்தின், குழுவொன்று அண்மையில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
