சிறிலங்கா இராணுவத்திற்கு உதவிகளை அறிவித்தார் இந்திய இராணுவத் தளபதி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்கா இராணுவத்திற்கான உதவிகளை அறிவித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்திற்குச் சென்ற ஜெனரல் திவேதியை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ வரவேற்றார்.
அவருக்கு இராணுவ மரபுகளுக்கு ஏற்ப, சிறிலங்கா படையினரால் மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரு நாடுகளினதும் இராணுவத் தளபதிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் சந்திப்பின் முடிவில், இந்தியாவின் உதவியுடன் புத்தல இராணுவக் கல்லூரியில் இந்தோ-சிறிலங்கா விளையாட்டு வளாகத்தை அமைப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது
இதைத் தொடர்ந்து இந்திய இராணுவத் தளபதியினால், 20 வாகனங்கள், பயிற்சி உபகரணங்கள், மற்றும் இரண்டு நோயாளர் காவு வண்டிகள், சிறிலங்கா இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டன.
இந்தநிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.



