சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரும் பிணையில் விடுதலை
அளவ்வவில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் சரத் மகோற்றியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குருநாகல மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை அடுத்து அவரை நீதிபதி திகிரி ஜெயதிலக பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
றியர் அட்மிரல் சரத் மகோற்றி போர்க்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.