மாகாண முதல்வர் பதவிகளை குறிவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பிரபலமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாசவிடம் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தமது தொகுதி மக்களுக்கு காத்திரமான சேவைகளை ஆற்றவதற்க தேவையான வசதிகள் தற்போது இல்லை என்றும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாகாண முதலமைச்சர்களாக இருந்தால் தமது பகுதி மக்களுக்கான சேவைகளை ஆற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.