கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஒக்ரோபர் 3ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
154 மீற்றர் நீளம் கொண்ட இந்த நாசகாரி போர்க்கப்பலில் கொமாண்டர் போல் றிச்சட்சன் தலைமையில் சுமார் 280 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.