சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்
சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிதிக் குழுவின் முன் அழைக்கப்பட்ட பொது கடன் முகாமைத்துவ பணியக அதிகாரிகள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தவணைகள் குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் விசாரித்த போதிலும், அதிகாரிகளிடம் தொடர்புடைய புள்ளிவிபர தரவுகள் எதுவும் இருக்கவில்லை.
நிதிக் குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வா, இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.