மின்சார விநியோகம் அவசர சேவையாக பிரகடனம்
சிறிலங்காவில் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் செயலாளர் இந்த அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மின்சார சபையை நான்கு நிறுவனங்களாகப் பிரித்து தனியார்மயப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து, மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
நேற்று நள்ளிரவில் இருந்து இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.