கைதுக்குப் பின் ரணிலைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தூதுவர்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில், பிளவர் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சீனத் தூதுவரின் வேண்டுகோளின் பேரில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் அரசியல் சூழல் மற்றும் பரந்த சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டுத் தூதுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து நேற்று முன்தினம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேறுவதற்கு முன்னர், சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.