கச்சதீவுக்கு எவரும் உரிமைகோர முடியாது- ரில்வின் சில்வா
கச்சதீவு சிறிலங்காவிற்குச் சொந்தமானது, அதனை வேறு எவரும் உரிமைகோர முடியாது என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று, கச்சதீவு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவு உள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் கச்சதீவு தொடர்பான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.
தமிழகத்தில் நடக்கும் பிரசாரங்களை எம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும்போது மக்களைக் கவருவதற்காக இவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றனர்.
ஆனால் சட்டரீதியாக அதற்கான வாய்ப்புகள் இல்லை. கச்சதீவு சிறிலங்காவிற்குச் சொந்தமானது என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.