சிறிலங்கா படை அதிகாரிகள் குழு இந்தியாவில் பயணம்
இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின் 24 பேர் கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பிரிகேடியர் ரொஷான் லொக்குதோட்டஹேவ தலைமையிலான இந்த குழுவில் 21 அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ் மற்றும் சாம்பியாவின் ஆயுதப் படைகளைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு மாண அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
ஜூலை 22 ஆம் திகதி தொடங்கிய இந்தக் குழுவின் மூன்று நாள் பயணத்தின் போது, மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா பகுதியின் தலைமையகம், மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய இந்திய இராணுவ நிறுவனங்களின் பிரதிநிதிகளுமடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் பயணம், இராணுவ தளபாட ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இந்தியா-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மற்றொரு படிக்கல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈடுபாடு, பிராந்திய பாதுகாப்பு, பரஸ்பர திறன் மேம்பாடு மற்றும் நீண்டகால மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.