செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 18ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில், புதிதாக 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த 3 நாட்களில் மட்டும் 20 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
அவற்றில் 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இந்த மனிதப் புதைகுழியில் இதுவரை 85 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட ஏனைய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளை மீட்கும் நடவடிக்கை நாளை தொடர்ந்து இடம்பெறும் என்றும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.