நிலந்த ஜயவர்த்தனவை நீக்கியது தவறு – தயாசிறி போர்க்கொடி
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், இதுதொடர்பாக, நிலந்த ஜயவர்த்தன பாதுகாப்புச் சபைக்கு 337 அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அச்சுறுத்தல் குறித்து ஜனவரி 9ஆம் திகதி கூட அவர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் ரவி செனவிரத்ன அதனை 16ஆம் திகதியே பார்வையிட்டிருக்கிறார்.
அத்துடன், அச்சுறுத்தல்கள் தொடர்பாக, நிலந்த ஜயவர்த்தன உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பகிர்ந்திருக்கிறார் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.