இரவிரவாகத் தொடர்ந்த அணையா விளக்கு போராட்டம்
யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
செம்மணிப் புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் – தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட புதைகுழிகளை சர்வதேச மேற்பார்வையில் அகழக் கோரியும்- இந்தப் புதைகுழிகள் குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்,செம்மணியில் நேற்றுக்காலை அணையா விளக்கு போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் செயல் என்ற தன்னார்வக் குழுவின் ஒழுங்கமைப்பில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நேற்றுப் பகலில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இரவும் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டத்தில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படங்கள் – முகநூல் ( பிரபாகரன் டிலக்சன்)