அணையா விளக்கு போராட்டத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பேரணி
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அணையா விளக்கு தணியா இலக்கு என்ற தொனிப்பொருளிளல் நேற்று மாலை 6 மணியளவில், ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு பாலத்தில் இந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எழுச்சிப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத்,சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தீப்பந்தங்களையும், சுலோக அட்டைகளையும் தாங்கி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.