வோல்கர் டர்க் கொழும்பு வந்தார் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஐ, சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.
நான்கு நாள்கள் பயணமாக வந்துள்ள அவர் சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்யவுள்ளார்.
நேற்று மாலை கொழும்பு வந்த வோல்கர் டர்க், சிறிலங்காவின் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இன்று அவர் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.
நாளை அவர் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டு செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடவுள்ளார்.