மேலும்

சிறிலங்கா மரைன் கொமாண்டோக்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

அமெரிக்கா நடத்தும் RIMPAC என்ற  பாரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

26 நாடுகளைச் சேர்ந்த 52 போர்க்கப்பல்கள், மற்றும் 25,000 படையினர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

முதல்முறையாக இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு சிறிலங்கா அழைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து 25 மரைன் கொமாண்டோக்கள், இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

இவர்கள், கடந்த மாதம், அவுஸ்ரேலியா சென்று அங்கிருந்து, அவுஸ்ரேலியக் கடற்படையின் HMAS Adelaide போர்க்கப்பலில், ஹவாய் நோக்கிப் பயணமாகினர்.

இவர்கள்  பயணித்த அவுஸ்ரேலிய போர்க்கப்பல்களின் அணி நேற்று பேர்ள் துறைமுகத்தை சென்றடைந்தது.

அதேவேளை, RIMPAC கடற்படைக் கூட்டுப் பயிற்சி இன்று ஹாவாய் தீவுகளுக்கு அப்பால் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *