மேலும்

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சரவையில் அழுத்தம்

mahinda-familyமகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பல அமைச்சர்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஐதேக அமைச்சர் காமின் ஜெயவிக்கிரம பெரேரா, உயர்மட்ட ஊழல்கள் மற்றும் குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க அரசியலமைப்பில் இடமில்லை என்றால், தற்போதுள்ள நீதிமன்றங்களின் ஊடாக இதனைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க, சாகல ரத்நாயக்க, உள்ளிட்ட பெரும்பாலானோர் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்குகளை சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மால் நீதித்துறையில் தலையீடு செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *