மேலும்

மதிப்புக் கூட்டு வரி திருத்தச்சட்டம் நிறைவேறியது – வாக்கெடுப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

parliamentசிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, இந்தச் சட்டமூலத்துக்கு கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

விவாதத்தின் முடிவில் இந்தச் சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 112 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் இந்த திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

அதேவேளை, சபையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

புதிய மதிப்புக்கூட்டு வரி திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதியில், 1.8 பில்லியன் ரூபா வரி வருமானத்தை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *