மூன்று அமைச்சுக்களை மீளப்பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வசமிருந்த மூன்று அமைச்சுக்களை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மீளப் பொறுப்பேற்றுள்ளார்.
சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களே, முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், இந்த அமைச்சுப் பொறுப்புகளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, இந்த அமைச்சுப் பொறுப்புக்கள், முதலமைச்சர் வசமே இருந்தன. அதிக வேலைப் பளுக்களைக் கருத்தில் கொண்டு இவை, சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
தற்போது, முதலமைச்சர் நிதியம் மற்றும் மீள்குடியேற்றம் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு. இவற்றை மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
