இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று 310.02 ரூபாவாக காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர், டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 310 ரூபா என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.6 வீதம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டில் அந்த வீழ்ச்சி தொடர்ந்து பதிவாகி வருகிறது.
சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை, 306.28 ரூபாவாகவும், விற்பனை விலை 313.81 ரூபாவாகவும் நேற்று பதிவாகியுள்ளது.
