வெனிசுவேலாவில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து கொழும்பில் போராட்டத்துக்கு ஏற்பாடு
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கண்டித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னிலை சோசலிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இன்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.
வெனிசுவேலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும், அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள சுவரொட்டிகள், அமெரிக்கா ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக குற்றம்சாட்டும் வகையில் அமைந்துள்ளன.
