மேலும்

ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியழித்தது அமெரிக்கா

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள போர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) உள்ளிட்ட அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமது அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளிக்கு வெளியே வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்.

அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன.

முதன்மை தளமான போர்டோவில் குண்டுகளின் முழு சுமையும் வீசப்பட்டது.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தளம் திரும்புகின்றன.

எமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது.

இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி,” என்று ட்ரம்ப்  அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கனரக பி -2 குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமெரிக்கா தாக்கியதாக கூறுகின்ற மூன்று அணுசக்தி மையங்களும், முன்னரே அகற்றப்பட்டு விட்டதாக ஈரானிய அரசு செய்தி ஊடகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *