சிறிலங்காவுக்கு பாதுகாப்பு உதவிகளை விரிவுபடுத்தியுள்ள ஜப்பான்
ஜப்பான் இந்த ஆண்டு அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவிகளை- சிறிலங்கா உள்ளிட்ட மேலும் ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
ஜப்பானின்அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தில் இதுவரை இந்தோ- பசுபிக்கில் உள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் ஜப்பான் தனது கடல்சார் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துகிறது.
அதற்கமைய இந்தோ – பசுபிக்கில் அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுடன்,- சிறிலங்கா,தாய்லாந்து, டொங்கா, கிழக்கு திமோர் மற்றும் பபுவா நியூகினியா ஆகிய ஐந்து நாடுகளையும் புதிதாக இணைத்துள்ளது.
ஜப்பான் 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், இந்த நாடுகளுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேரிடர் மீட்பு, கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, இந்த நாடுகளுக்கு, ஜப்பானிய தயாரிப்பான ட்ரோன்களை வழங்குவது குறித்தும் ஜப்பானிய அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.