மேலும்

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் நாள்  இவர் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சேவை நீடிப்பு  2019  ஓகஸ்ட் 22ஆம் நாளுடன் முடிவடையவிருந்த நிலையில், அப்போதைய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, டிசெம்பர் 31 வரை சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.

முன்னதாக, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2015 தொடக்கம் 2017 வரை சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *