மேலும்

விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.

எனினும், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்களையே எடுக்குமாறும் அந்தக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து கையெழுத்திட்ட 13 அம்ச கோரிக்கைகளை எந்தவொரு பிரதான அதிபர் வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல், 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர்.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளாத போதும்-  சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை இன்னமும் வெளிவராததால், நேற்றைய கூட்டத்தில் முடிவெதையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதேவேளை, இன்றும் நாளையும் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறுவதால், தமிழ் வாக்காளர்களிடம் ஒரு கோரிக்கையை விடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதிபர் தேர்தலில் தவறாமால் வாக்களிக்குமாறும், விரும்பிய ஒருவருக்கு வாக்கை அளிக்குமாறும் கோருவதென தீர்மானிக்கப்பட்டது.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியான பின்னர், ஐந்து கட்சிகளும் கூடி ஒருமித்த முடிவை எடுப்பதென்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *