மேலும்

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு

சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்கும்படி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

கடந்த 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து, போலி செய்திகள் பரப்பப்பட்டதால் சமூக ஊடகங்கள் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டன.

2 கருத்துகள் “சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு”

  1. Jayanthan Tharma
    Jayanthan Tharma says:

    அடுத்த குண்டு வேடிக்க போகுதாம் அதை கண்டுபிடி. அதை விட்டுட்டு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *