மேலும்

உத்தரதேவி தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

காங்கேசன்துறைக்கான உத்தரதேவி தொடருந்து சேவையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆறு பெட்டிகளைக் கொண்ட டீசலில் இயங்கும் தொடருந்து, உத்தரதேவியாக பயணிக்கவுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் கோட்டை தொடருந்து நிலையத்தில் நடந்த ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தொடருந்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோர் பயணித்தனர்.

சிறிலங்கா அதிபர் மருதானை தொடருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டார். ஏனையவர்கள் தொடர்ந்து வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டனர்.

இதன்போது, கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை தொடருந்து நிலையத்தையும், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும், இந்தியத் தூதுவரும் திறந்து வைத்தனர்.

ஆறு பெட்டிகளைக் கொண்ட இந்த புதிய தொடருந்தின் இரண்டு பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. 120 கி.மீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இந்த தொடருந்தில், மொத்தம் 724 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *