சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு ஜெயந்த ஜெயசூரிய
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் அடுத்தமாதம் ஓய்வு பெறவுள்ளார்.
இந்தநிலையிலேயே சட்ட மா அதிபராக உள்ள ஜயந்த ஜயசூரியவின் பெயரை புதிய தலைமை நீதியரசைர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் முன்மொழியவுள்ளார்.
எனினும், உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழுவே இந்த நியமனத்தை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.