மேலும்

சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்க போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், நேற்றுமுன்தினம் புறப்பட்டுச் சென்றது.

இதன்போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.

சிறிலங்கா கடற்படையின் சுரணிமல என்ற அதிவேக ஏவுகணைக் கப்பலும், அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலும் அதில் அடங்கியிருந்த, தரையிறங்கு கலங்களும், ஒரு AH-1Z கோப்ரா உலங்கு வானூர்தியும்,  ஒரு,  UH-1Y Huey உலங்கு வானூர்தியும்,  இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.

சிறிலங்கா கடற்படையுடனான இந்தக் கூட்டுப் பயிற்சிகளையிட்டு பெருமைப்படுவதாகவும், இந்த உறவுகள் வலுப்படும் என்றும்  அமெரிக்காவின் 7 ஆவது கப்பல் படையின் ஈரூடப் படைப்பிரிவின் தளபதி றியர் அட்மிரல் பிராட் கூப்பர் மற்றும் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் டெனில் ஜாகோ ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *