மேலும்

வட மாகாண சபை உறுப்பினர் கைது – பிணை வழங்கியது நீதிமன்றம்

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2ஆம் நாள் முல்லைத்தீவில் கடற்றொழில் திணைக்கள செயலகம் முன்பாக, சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஒன்று கூடியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி, முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்கள செயலகம் முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது. திணைக்களத்தின் செயலகம் தாக்கி சேதப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு  நீதிமன்ற நீதிவான் முன் நிறுத்தப்பட்டார்.

அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *